இந்த வலைப்பதிவில் தேடு
மதுரை வரலாற்று தோற்றம்
சி.பா. ஆதித்தனார் வாழ்க்கை வரலாறு
சி.பா. ஆதித்தனார் வாழ்க்கை வரலாறு
தமிழர் தந்தை என்றழைக்கப்படும் சி.பா. ஆதித்தனார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில் 1905 ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27 ஆம் தேதி பிறந்தார். தந்தையார் சிவந்தி ஆதித்தன். தாயார் கனகம் அம்மையார்.
‘ஆதித்தனார்’ என்பது அவரது குடும்பப்பெயர்.
ஆதித்தனாரின் இயற்பெயர் சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன்.
சி.பா.ஆதித்தனார் தமது பள்ளிப்படிப்பை திருவைகுண்டத்தில் பயின்றார்.திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்ட மேல் படிப்பை முடித்தார்.
கல்லூரியில் படிக்கும்போதே ‘தொழில் வெளியீட்டகம்’ என்னும் பதிப்பகத்தைத் தொடங்கி, மெழுகுவர்த்தி செய்வது எப்படி ? தீப்பெட்டி தயார் செய்வது எப்படி? ஊதுபத்தி தயார் செய்வது எப்படி? சோப்பு தயார் செய்வது எப்படி? பேனா மை தயாரிப்பது எப்படி? என்பன போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டார். இதற்காக ஒரு அச்சகத்தை விலைக்கு வாங்கினார்.
இதன் மூலம் சுய தொழில் மீது அவருக்கு இருந்த ஆர்வம் வெளிப்படுவதுடன், தமிழக இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நல்ல சிந்தனையையும் அறிய முடிகிறது.
சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். இங்கிலாந்து தலைநகர் இலண்டன் மாநகரத்திற்குச் சென்று படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார். இலண்டனில் படிக்கும் போதே நிருபராக பணியாற்றி படிப்புச் செலவிற்கு பணம் சம்பாதித்தார்.
சுதேசமித்திரன்இதழ், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் இலண்டனிலிருந்து வெளி வந்த ஸ்பெக்டேட்டர் வார இதழ் முதலிய இதழ்களுக்கு செய்திக் கட்டுரைகள் எழுதி அனுப்பினார். இந்திய இதழ்களுக்கு இலண்டனில் செய்தியாளராக இருந்த
முதல் தமிழர் இவரே.
இலண்டனில் படிக்கும்போதே இதழ்கள் நடத்திட வேண்டுமென்ற உயர்ந்த இலட்சியத்தை உள்ளத்தில் ஏற்றார்.
இலண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று தமிழகம் திரும்பியவுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை
மேற்கொண்டார்.
சிங்கப்பூர்நாட்டில் பெரும் தொழிலதிபராக விளங்கிய ஓ.ராமசாமி நாடார் என்பவரின் மகள் ஆச்சியம்மாள் என்ற கோவிந்தம்மாளை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.
சிங்கப்பூரில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த பொழுது, நல்ல வருமானம் கிடைத்தது. ஆனால், சி. பா.ஆதித்தனாரின் சிந்தனையெல்லாம் இதழ் நடத்த வேண்டும் என்பதையே சுற்றிச்சுற்றி வந்தது.
அவரது மாமனாரோ அதிக வருமானம் வரும் வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டு இதழ்நடத்தினால் பணம் சம்பாதிக்க முடியாது என்றார்.
“அரிசி விற்றால்சாக்காவது மிச்சப்படும், பருப்பு உடைத்தால் உமி, குருணையாவது மிச்சப்படும், இதழ் நடத்தினால் என்ன
மிஞ்சும்? இருப்பதும் போய்விடும் ” எனக் கூறி இதழ் நடத்துவதை தடுத்தார்.
ஆனாலும், இதழ் நடத்தியே தீருவது என்பதில்
ஆதித்தனார் உறுதியாக இருந்தார். வேறு வழியில்லாமல் அவரது மாமனாரும்ஒத்துக் கொண்டார்.
முதன் முதலில் ‘மதுரை முரசு’ என்னும் வாரம் இருமுறை வெளிவரும் இதழைத் தொடங்கினார். பின்பு, ‘தமிழன்’
என்னும் வார இதழைத் தொடங்கினார். தமிழன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தது தமிழின் மீது அவர் கொண்ட காதலால்தான்.
மதுரையில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில்,கலவரம் ஏற்பட்டு காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர்
கொல்லப்பட்டார்கள் ஆனால், ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட வேண்டும் என்று காவல்துறையினர் கட்டளையிட்டார்கள்.
ஆதித்தனார் “மதுரையில் போலீஸ்துப்பாக்கிச் சூடு! மூன்று பேர் சாவு!” என முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் செய்தி
வெளியிட்டார்.அதைப் பார்த்த ஆங்கிலேய அதிகாரிகள் போர்க்கால அதிகாரத்தைப் பயன்படுத்தி ‘மதுரை முரசு’ இதழைத் தடை செய்தனர். அதிகாரிகள் ஆணை பிறப்பித்தாலும் உண்மைச் செய்தியை வெளியிட ஆதித்தனார் தயங்கியது இல்லை என்பதற்கு
இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
1942 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி ‘தினத்தந்தி’ நாளிதழை வெளியிட்டார். தலையங்கத்தில் நாட்டின் அரசியல்,
பொருளாதாரப் பிரச்சினைகளை மக்களுக்குப் புரியும் விதத்தில் எளிய தமிழ்நடையில் விளக்கினார். “ஒரு படம் ஆயிரம்
சொல்லுக்குச் சமம்” என்னும் சீன பழமொழிக்கேற்ப, தமது தினத்தந்தி நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியிட்டார்.
பாமர மக்களும், எழுதப் படிக்கத்தெரிந்தவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள்,கவர்ச்சி மிகுந்த தலைப்புகள், கருத்துப்படங்கள் இவற்றைக் கையாண்டார்.
அரசியல் , பொருளாதாரம்,வர்த்தகம், திரைப்படம், விளையாட்டுச்செய்திகள் ஆகியவற்றை வெளியிட்டு தமிழக மக்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளவும், நாட்டு நடப்புகளை
தெரிந்து கொள்ளவும் உதவினார்.
தமிழகத்தில் இன்று ‘தினத்தந்தி’நாளிதழ் 12 நகரங்களிலிருந்தும், புதுச்சேரி,மும்பை, பெங்களுர் முதலிய பெருநகரங்களிலிருந்தும் வெளிவருகிறது.
பட்டிதொட்டியெங்கும்,ஊர்தோறும் தினத்தந்தி நாளிதழ் பரவி பல இலட்சக்கணக்கான வாசகர்கள் படிக்கும்
நிலைக்கு வளர்ந்துள்ளது.
மேலும், தினத்தந்தி குழுமத்திலிருந்து தினத்தந்தி, மாலை முரசு,ராணி, ராணி முத்து, ராணி காமிக்ஸ்
போன்ற வார, மாத இதழ்களும் வெளியிடப்படுகிறது.
பேரறிஞர் அண்ணா அழைத்ததால் தி. மு. க.வில் இணைந்தார். 1957 முதல் 1962 வரை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும்
பணியாற்றினார். அவர் சபாநாயகராகப் பொறுப்பேற்றது முதல் சட்டமன்றத்தில் சபை ஆரம்பிக்கும் முன்பு தினம் ஒரு திருக்குறள் கூறி அவையைத் தொடங்கினார்.
தமிழக அமைச்சரவையில் கூட்டுறவு, விவசாய அமைச்சராகப் பணியாற்றினார். திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி ஏற்படுத்தப்பட்டு அக்கல்லூரியில் இதழியல் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. சி.பா. ஆதித்தனார்’இதழாளர் கையேடு’ என்னும் நூலை வெளியிட்டார். அந்த நூல் இதழாளர்களுக்கு மிகவும் பயனுடையதாக இன்றும் விளங்குகிறது.
‘உடல் மண்ணுக்கு , உயிர் தமிழுக்கு’ என்னும் முழக்கத்தின் மூலம் தமிழர்களைத் தட்டியெழுப்பினார். தமிழர்கள் தங்கள் கையொப்பத்தின் தலைப்பெழுத்தையும், கையெழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
தாய் நாட்டுப் பற்றும், தமிழ் மக்கள் மீது அன்பும் கொண்டிருந்தார். பாமரனையும் படிக்க வைக்க வேண்டும், தமிழ்மொழி, தமிழினம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக தமது உயிர் மூச்சு உள்ளவரை வாழ்ந்தார் சி.பா.ஆதித்தனார்!
தமிழ்நாட்டில் 1938 இல் உருவான இந்தி எதிர்ப்புப் போரில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கம் எழுப்பப்பட்டது. இது தமிழ்த் தேசியத்தின் முதல் எழுச்சிப் போராட்டமாகும்.
அப்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த சி.பா.ஆதித்தனரை இந்தப் போராட்டம் மிகவும் கவர்ந்தது. தமிழ்நாட்டை மீட்கும் இலட்சியத்தை மேலும் வளர்த்தெடுக்க விரும்பினார்.
உடனடியாக சென்னைக்குக் குடும்பத்தோடு வந்தடைந்தார். அப்போது ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கம் நீதிக்கட்சியால் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று மாற்றம் பெற்றிருந்தது.
அதனை விரும்பாத ஆதித்தனார் தனித்தமிழ் நாடு கோரும் இயக்கமொன்றைத் தனியாக உருவாக்க எண்ணினார். அதன்படி 1942 இல் ‘தமிழ் ராச்சியக் கட்சி’யை தொடங்கினார். பின்னர் அதனை 1957 இல் ‘நாம் தமிழர் இயக்கம்’ என்று பெயர் மாற்றினார்.
அதற்கான காரணத்த அவரே விளக்குகிறார்: “நான் அயர்லாந்து விடுதலை இயக்கத்தை அறிந்துள்ளேன். அதன் பெயர் ‘சின்பெயின்’. அதன் பொருள் நாங்கள் ஐரிஷ் மக்கள்.
பிரித்தானியரும் ஐரிஷ் மக்களும் வேறு வேறானவர்கள் என்பதையும் அது குறித்தது. அதுபோல் ‘நாம் தமிழர்’ என்று சொல்லும் போது நாங்கள் இந்தியர்களுமல்ல, திராவிடர்களுமல்ல, நாங்கள் தமிழர்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது. அதனால் தான் நாம் தமிழர் என்ற பெயரை தெரிவு செய்தேன்”. என்றார்.
1942 ஆம் ஆண்டு ‘தமிழப்பேரரசு’ எனும் அரிய நூலை வெளியிட்டார். ஒரு மொழி வைத்து உலகாண்ட தமிழர்கள் இழந்த ஆட்சி உரிமையைப் பெற்று, ஒரு பேரரசாக உலகத்தில் மீண்டும் விளங்க முடியும் என்பதை எடுத்துரைக்கும் மிகச் சிறந்த நூலாகும்.
இந்நூல் அனைவராலும் பாராட்டப்பட்டு பதினாறுக்கும் மேற்பட்ட பதிப்புகளை கண்டது. அந்நூலில், ஆதித்தனார் கூறுகிறார்: “தமிழ்நாட்டின் வரலாற்றில் 600 ஆண்டு என்பது ஒரு கால வட்டம் ஆகும். அதாவது, தமிழர்களுக்கு 600 ஆண்டு வாழ்வும் அதன் பின் தாழ்வுமாக மாறி மாறியே வந்துள்ளது.
கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை பிற நாட்டவர்களான வடவர்களைத் தோற்கடித்து தமிழர்கள் ஆண்டார்கள்.
வில்,புலி, மீன் கொடி உயரப் பறந்தது. முதல் 600 ஆண்டுகள் தமிழ்நாட்டின் பொற்கால வட்டமாகும்.
அடுத்து, கி.பி.3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள், பல்லவர்கள் தமிழகத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். வில், புலி, மீன் கொடி மறைந்தது. வடமொழி வளர்ந்தது. இரண்டாவது 600 ஆண்டுகள் தமிழகம் அடிமைக்கால வட்டமாகும்.
அடுத்து, வடநாட்டு அரசர்களுக்கும், வடமொழிக்கும் அடிமைப்பட்ட தமிழினம் மீண்டும் 9 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசால் தலை நிமிர்ந்தது. மூன்றாவது 600 ஆண்டுகள் தமிழகத்தின் இரண்டாவது பொற்கால வட்டமாகும்.
அடுத்து கி.பி.14 ஆம் நூற்றாண்டு முதல் இன்றைய 20 ஆம் நூற்றாண்டு வரை தமிழினம் அடிமையாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விசயநகரப் பேரரசு, உருது நவாப்புகள் அரசு, ஆங்கிலப்பேரரசு, தில்லி இந்திப் பேரரசு என்று தொடர்ந்தாற் போல் வேற்றினத்தாரால் தமிழினம் அடிமைப்பட்டு கிடக்கிறது.
இந்த 600 ஆண்டுகள் தமிழகத்திற்கு ‘கறுப்பு கால வட்டம்’ என்ற போதிலும் அதனை தற்போது கடந்து விட்டோம். தமிழகத்தின் பொற்காலம் மீண்டும் தோன்ற வேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ்மக்கள் விழித்து எழுவது உறுதி. சுதந்திர தமிழப் பேரரசு அமைத்திடுவோம்…
என்று விரிவாக அந்த நூலில் ஆதித்தனார் குறிப்பிட்டுள்ளார்.
தமிழன் தன்னை திராவிடன் என்று சொல்வதை எப்போதும் இழிவாகவே கருதினார். தமிழ்ப்புலவர்கள் எழுதிய எந்த இலக்கியத்திலும் திராவிடம், திராவிடநாடு கிடையாது என்பதால் திராவிடம் தமிழருக்கு ஆகாது என்றார்.
உலகில் சிறுபான்மையினர் என்றாலே அதற்கு அடிமை என்று பொருள். இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மை. சிங்களரோ பெரும்பான்மை. அதனால் தமிழர்கள் அடிமைப்படுத்தப் பட்டனர். அதுபோல் இந்தியாவில் இந்தி பேசுபவர் பெரும்பான்மை. தமிழ்நாட்டினர் சிறுபான்மை. அதனால் தில்லி ஆட்சிக்கு தமிழர்கள் அடிமையாக உள்ளனர்.
அறிஞர் அண்ணா எழுப்பும் திராவிட நாட்டிலும் தெலுங்கர்கள் அதிகமாக இருப்பர். தமிழர்கள் சிறுபான்மை ஆகி விடுவர். எனவே திராவிட நாடு கிடைத்தாலும் அதிலிருந்து விடுபட தமிழ்நாடு விடுதலையை நடத்துவேன் என்றும் முழங்கினார்.
சுதந்திரத் தமிழ்நாடு என்பது குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்றது என்று பாரத மாதா புத்திரர்கள் கேலி பேசி வந்தனர்.
அப்போது, “தமிழ்நாட்டை விடச் சிறியவைகளான 74 நாடுகள் முழு உரிமையுடன் வாழுகின்றன. அவை குண்டுச் சட்டியை விடச் சின்னஞ்சிறிய தேநீர் கோப்பைக்குள் குதிரை ஓட்டுவது கண்ணுக்குத் தெரிய வில்லையா?” என்று பதிலடி தந்தார்.
1958 இல் நாம் தமிழர் இயக்கம் சார்பில் ‘சுதந்திரத் தமிழ்நாடு’ மாநாடு நடத்தினார். அதில் இந்திய வரைபட எரிப்புப் போராட்டம் நடத்தப் போவதாக தீர்மானம் நிறைவேற்றினார்.
தந்தை பெரியார் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்ட நிலையில் அவரோடு இணைந்து (1960) பட எரிப்புப் போராட்டம் நடத்தினார். அதில் கைது செய்யப் பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அதே ஆண்டில் இந்தியைத் திணிக்கப் போவதாக அறிவித்த குடியரசுத் தலைவர் பாபு இராசேந்திர பிரசாத்திற்கு கறுப்புக் கொடி காட்ட முனைந்த போதும் கைது செய்யப்பட்டார்.
ஆதித்தனார் தான் நடத்திய இதழுக்கு ‘தமிழன்’ என்றும், இயக்க அலுவலகத்திற்கு ‘தமிழன் இல்லம்’ என்றும், இயக்க வார இதழுக்கு ‘தமிழ்க்கொடி’ என்றும், பதிப்பகத்திற்கு ‘தமிழ்த்தாய்’ என்றும் பெயர் சூட்டினார்.
தாய் நாட்டுப் பற்றும், தமிழ் மக்கள்மீது அன்பும் கொண்டிருந்தார். பாமரனையும் படிக்க வைக்க வேண்டும், தமிழ்மொழி, தமிழினம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக தமது உயிர் மூச்சு உள்ளவரை வாழ்ந்தார் சி.பா.ஆதித்தனார்! 1981 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் காலமானார்.
அவர் இறுதிக் காலத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து நாம் தமிழர் இயக்கத்தை கலைத்தது அவரின் தமிழ்த் தேசிய கொள்கைக்கு ஏற்பட்ட சரிவாகும்.
திராவிடத்தின் பதவி அரசியலுக்கு ஆதித்தனார் பலியாகாமல் இருந்திருந்தால் என்றோ தமிழ்த்தேசியம் வளர்ச்சி நிலை கண்டிருக்கும். இருப்பினும் அவர் மூட்டிய தமிழ்த் தேசிய பெரு நெருப்பு இன்னும் அணைய வில்லை. அது ஈழ விடுதலையிலும் தமிழக விடுதலையிலும் கனன்று கொண்டு தான் இருக்கிறது!<
https://tamilar2020.blogspot.com/?m=1பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு
- 1908 அக்டோபர் 30,ஆம் நாள் ராமநாதபுரத்தில் பசும்பொன் என்ற ஊரில் முத்துராமலிங்க தேவர் பிறந்தார் .
- இவரது பெற்றோர் இந்திராணி அம்மையார் மற்றும் உக்கிரபாண்டி தேவர் .
- இவரது தயார் இறந்துவிட்டதால் கல்லுபட்டி என்ற ஊரில் தமது பாட்டி வீட்டில் வளர்ந்தார்.
- தேவரின் தாயார் இறந்துவிட்டதால் கமுதியில் வாழ்ந்த "ஆயிஷாபீவி "அம்மாள் என்ற இஸ்லாம் பெண்ணிடம் பால் குடித்து வளர்ந்தார் .
- தேவர் தமது பொது வாழ்வில் முஸ்லிம்கள் மீது பற்றும்,பாசமும் ,மிகுந்த மரியாதையும் தந்து பழகினார் .
- இவர் "தெய்வதிருமகனார்" என்று அழைக்கப்படுகிறார் .
- முத்துராமலிங்கதேவர் சுதந்திர போராட்ட தியாகியாகவும் ,ஆன்மிக வாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிப்பவரகவும் இருந்தார் .
- இவர் சிறந்த அரசியல் வாதியாகவும் திகழ்ந்தார் .
- நேதாஜி சுபாஷ் சந்தி போஸ்யின் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பினார்.
- இவர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழக தலைவராகவும் தேசிய துணை தலைவராகவும் இருந்தார் .
- இந்த கட்சியை நேதாஜி தேவருடன் இணைந்து துவக்கியதாகும்.
- இவர் மூன்று முறை இந்தியக் பாராளுமன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் .
- இவர் 1957 ஆம் ஆண்டு தேவர் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டார் ,பின் கொலைக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை என்று நீதிமன்றம் விடுதலை செய்தது .
- 1933 ஆம் ஆண்டு சாயல்குடி என்ற கிராமத்தில் தேவர் முதன் முறையாக 3 மணி நேரம் விவேகனந்தரின் தத்துவங்களை பேசினார் ,இதில் காமராஜரும் கலந்து கொண்டு தேவரின் பேச்சை கேட்டார் .தேவரை போல பேசக்கூடியவர்கள் சேவை காங்கிரஸ் கு தேவை என்று அவர் கருதினார்.
- 1920 ஆம் ஆண்டில் மதுரை,திருநெல்வேலி,இராமநாதபுரம் ,பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிராக முதன் முதலில் தேவர் போராடினார் .
- மதுரை மீனாட்சி அம்மன் ஆலையத்திற்கு அரிசன்களைஅழைத்து செல்ல வைத்தியநாதர் முடிவு செய்தார் ,அனால் அங்கு எதிர்ப்பு ஏற்ப்பட்டது ,இந்த கூடத்தில் பசும்பொன் முதுரமளிங்கதேவர் கலந்துகொண்டார் . ,ஆளையபிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும் உறுதிமொழியும் வேண்டும் என கேட்டார்கள்,அதற்க்கு அவர் "என் சகோதரர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் அன்னை மீனாட்சி கோயிலில் ஆளையபிரவேசம் செய்கையில் அவர்களுக்கு தேவையான அணைத்து பாதுகாப்பும் என் மக்கள் தருவார்கள் என்றார். "
- தேவர் உடல்நல பாதித்த காரணத்தால் 29 1963 அன்று காலை 5 மணியலவில் மரணமடைந்தார் .
- தேவரின் நினைவாகவும் அவரை போற்றும் வகையிலும் தேவர் குருபூஜை கொண்டடபடுகிறது .
- 1995 ஆம் ஆண்டு மத்திய அரசு தேவரை கௌரவ்சிக்கும் வகையில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
- 2010 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலெலிதா தேர்தல் பிரசாரத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க காப்பு வழங்கப்பட்டது https://tamilar2020.blogspot.com/?m=1
இந்திராகாந்தி அம்மையார் பிரதமராக வரலாறு
திருமதி. இந்திரா காந்தி
1917 ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி பெருமைமிக்க குடும்பத்தில் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மகளாகப் பிறந்தார். சுவிட்ஸ்ர்லாந்தின் பெக்ஸ் பகுதியிலுள்ள எக்கோல் நோவல், ஜெனிவாவிலுள்ள எக்கோல் இண்டர் நேஷனல், பம்பாய் மற்றும் பூனாவில் உள்ள பீப்பிள்ஸ் ஒன் ஸ்கூல், பிரிஸ்டாலிலுள்ள பேட்மிட்டன் ஸ்கூல், விஷ்வபாரதி, சாந்தி நிகேதன், ஆக்ஸ்போர்ட் சோமார்வில் கல்லூரி போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் அவர் கல்வி பயின்றார். பல்வேறு சர்வதேச பல்கலைகழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை அளித்துள்ளன.
சிறந்த கல்வி பெற்ற குடும்பப் பின்னனியிலிருந்து வந்த அவருக்கு கொலம்பியா பல்கலைகழகம் உயர் நிலை பட்டம் (சைடேஷன் ஆப் டிஸ்டிங்கஷன்) அளித்துள்ளது. திருமதி இந்திரா காந்தி சுதந்திர போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபத்திக் கொண்டார்.
ஒத்துழையாமை இயக்கத்தின் போது காங்கிரஸ் கட்சிக்கு உதவும் வகையில், தனது சிறு வயதிலேயே சர்க்கா சங்கத்தையும் 1930ல் வானர் சேனாவையும் நிறுவினார். 1942 செப்டம்பர் மாதம் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியின் வழிகாட்டுதலில் தில்லியில் 1947ல் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவர் பணியாற்றினார்.
1942 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி பெரோஸ் காந்தியை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள். திருமதி. காந்தி 1955 ஆம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழு கமிட்டியில் உறுப்பினரானார். அதே ஆண்டில் கட்சியின் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1958 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மத்திய நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அனைத்திந்திய காங்கிரஸ் குழு தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராகவும் இருந்தார்.
1956-ல் அனைத்திந்திய இளைஞர் காங்கிரஸ் மற்றும் பெண்கள் துறையின் தலைவராக இருந்தார். 1959 முதல் 1960 வரை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக அவர் பணியாற்றினார். மீண்டும் 1978 ஜனவரி மாதம் அவர் இப்பதவியை ஏற்றார்.
1964 முதல் 1966 வரை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1966 ஜனவரி முதல் 1977 மார்ச் வரை இந்தியாவின் மிகஉயரிய பதவியான பிரதமர் பொறுப்பை எற்றார். 1967-ல் செப்டம்பர் முதல் 1977 மார்ச் வரை மத்திய அணுசக்தி துறையின் அமைச்சராகவும் இருந்தார். கூடுதலாக 1967, செப்டம்பர் 5 முதல் 1969 பிப்ரவரி 14 வரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 1970 ஜூன் முதல் 1973 நவம்பர் வரை மத்திய உள்துறை அமைச்சராகப் பணி புரிந்தார். 1972 ஜூன் முதல் 1977 மார்ச் வரை மத்திய விண்வெளித்துறை அமைச்சராக இருந்தார். 1980 ஜனவரி 14 முதல் மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார். மத்திய திட்டக் குழுவின் தலைவராகவும் பதவி வகித்தார்.
கமலா நேரு நினைவு மருத்துவமனை, காந்தி ஸ்மாரக் நிதி, கஸ்தூரிபாய் காந்தி நினைவு அறக்கட்டளை போன்ற பல்வேறு அமைப்புகளிலும் நிறுவனங்களிலும் திருமதி. காந்தி முக்கிய பொறப்பு வகித்தார். ஸ்வராஜ் பவன் அறக்கட்டளையின் தலைவராகவும் செயல்பட்டார். 1955 பால் சகயோக், பால பவன் வாரியம் மற்றும் குழந்தைகளுக்கான தேசிய அருங்காட்சியகம் ஆகிய நிறுவனங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
திருமதி. இந்திரா காந்தி, அலகாபாத்தில் கமலா நேரு வித்யாலாவை நிறுவினார். 1967 முதல் 1977 வரை ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம், வடகிழக்கு பல்கலைகழகம் போன்ற பெரிய நிறுவனங்களுடன் அவர் இணைந்து செயல்பட்டார்.
டில்லி பல்கலைகழக நீதிமன்றத்தின் உறுப்பினராகவும், ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரா அமைப்பின் இந்திய பிரதிநிதியாகவும் (1960 – 1964) ஐ.நா. கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும், (1960 -1964) 1962-ல் தேசிய பாதுகாப்பு குழுவின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றினார்.
சங்கீத நாடகக் கழகம், தேசிய ஒருங்கிணைப்புக்குழு, இமய மலைஏறும் கலைக்கான நிறுவனம், தட்சிண பாரத், ஹிந்தி பிரச்சார சபை, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சமூகம், ஜவஹர்லால் நேரு நினைவு நிதி ஆகிய நிறுவனங்களுடன் அவர் இணைந்து செயலாற்றினார்.
திருமதி. இந்திரா காந்தி 1964 ஆகஸ்ட் முதல் 1967 பிப்ரவரி வரை மாநிலங்களவை உறப்பினரானார். நான்காவது, ஐந்தாவது, ஆறாவது பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராப் பணியாற்றினார். மீண்டும் ஏழாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் உத்திரப்பிரதேசத்தின் ரேபரலி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறகு 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆந்திர பிரதேசத்தின் மேடக் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். மேடக் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு, ரேபரலி தொகுதியை ராஜினாமா செய்தார்.
1967 முதல் 1977 வரை காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னார் 1980 ஜனவரி மாதம் மீண்டும் இப்பொறுப்பை ஏற்றார்.
பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த அவர் வாழ்க்கையை ஒரு ஒருங்கிணைந்த செயல்பாடாகவே கருதினார்.
ஆர்வமும் செயல்பாடுகளும் வெவ்வேறு தன்மையை கொண்டிருந்தாலும் இரண்டையும் தனித்தனியாக அவர் பிரித்துப்பார்க்கவில்லை.
அவர் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். 1972ல் பாரத் ரத்னா, 1972ல் வங்காள தேசத்தின் விடுதலைக்காக மெக்ஸிகன் கழகத்தின் விடுதலைக்கான விருது, ஜ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் 2-வது ஆண்டு விருது, 1976ல் நகரி பிரச்சாரினி சபையின் சாகித்தய வச்சாஸ்பதி (ஹிந்தி) ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
1953ம் ஆண்டு அமெரிக்காவின் தாய்மை விருது (மதர்ஸ் அவார்ட்), சாதுரியம் / செயல்திறனில் சிறந்து விளங்கியதற்காக இத்தாலியின் இஸபெல்லா தி’ எஸ்தே விருது மற்றும் யேல் பல்கலைகழகத்தின் ஹாவ்லண்ட் நினைவு பரிசையும் அவர் வென்றுள்ளார்.
பிரஞ்ச் பொது மக்கள் கருத்து நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பு / வாக்குபதிவின்படி 1967 மற்றும் 1968 ஆம் ஆண்டுகளில் பிரஞ்ச் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்ட நபராக இருந்தார்.
1971ல் அமெரிக்காவின் சிறப்பு கேலப் வாக்கெடுப்பின்படி திருமதி இந்திரா காந்தி உலகிலேயே மிக அதிக மக்களால் விரும்பப்பட்ட பெண்மனி ஆவார். விலங்குகளின் பாதுகாப்புக்காக, 1971ல் அர்ஜன்டினா சொசைடி அவருக்கு கௌரவ டிப்ளமோ பட்டத்தை அளித்தது.
தி இயர்ஸ் ஆப் ச்லேஞ் (சவால்கள் நிறைந்த ஆண்டுகள்), (1966-69), தி இயர்ஸ் ஆப் எண்டேவர்ஸ் (முயற்சிகள் நிறைந்த ஆண்டுகள், 1969-72), 1975ல் இந்தியா (லண்டன்), 1979ல் ‘இந்தியா’ (லாஸேன்) போன்ற பல்வேறு உரைகளும், எழுத்துகளும் அவரின் பிரபலமான புத்தக வெளியீடுகளாகும்.
இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளவிலும் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், பர்மா, சீனா, நேபாளம் மற்றும் இலங்கை (ஸ்ரீலங்கா) ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரான்ஸ், ஜெர்மன், பெட்ரல் ரிப்பளிக் ஆப் ஜெர்மன், கயானா, ஹங்கேரி, ஈரான், ஈராக், இத்தாலி போன்ற நாடுகளுக்கு அவர் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டார்.
அல்ஜிரியா, அர்ஜன்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, செக்கோஸ்லோவாகியா, பொலிவியா எகிப்து நாடுகளுக்கும் திருமதி. காந்தி பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, ஜப்பான், ஜமயக்கா, கென்யா, மலேசியா, மொரிசியஸ், மெக்ஸிகோ, நெதர்லாண்ட்ஸ், நியூசிலாந்,து, நைஜிரியா, ஓமன், போலாந்த், ரோமனியா, சிங்கப்பூர், சுவிஸ்சர்லாந்த், சிரியா, ஸ்வீடன், டான்ஸானியா, தாய்லாந்த், ட்ரினிடாட் மற்றும் டூபகோ, யுனைட்டட் கிங்டம், அமெரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் தலைநகரத்திற்கும் (நியூயார்க்) பயணம் சென்றுள்ளார்
https://tamilar2020.blogspot.com/?m=1 .
ஸ்மார்ட் ரேசன் கார்டு தமிழ்நாட்டு
ஸ்மார்ட் ரேஷன் கார்டு தமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் கார்டு என்பது வழக்கமான ரேஷன் கார்டின் மாற்றாகும், இது பொதுவாக சமூகத்தில் உள்ள ஒரு குறிப்பிட...

-
சங்ககால புலவர்கள் புலவர்கள் அகம்பன் மாலாதனார் அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சில் ஆந்தையார் அடைநெடுங்கல்வியார் அணிலாடு முன்...