தமிழ் : முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் expr:class='"loading" + data:blog.mobileClass'>

இந்த வலைப்பதிவில் தேடு

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்

 

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்

பாண்டிய மன்னர் காலத்து பாடல் கல்வெட்டு கண்டெடுப்பு

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி அருகே உள்ள கணக்கனேந்தல் கிராமத்தில் பாண்டிய மன்னர் காலத்துக்கு பாடல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், கணக்கனேந்தலில் கண்டெடுக்கப்பட்ட இந்த கல்வெட்டு தமிழ்ப் பாடல் வடிவில் அமைந்துள்ளது. “ஸ்ரீ அன்னமென்னும் நடை“ என்ற தொடருடன் கல்வெட்டு தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் கோயிலில் இருக்கும் முதலாம் மாறவர்மனின் கல்வெட்டில் காணப்படும் தொடரைப் போன்று காணப்படுகிறது. இந்த கல்வெட்டில் சதுர ஆண்டு 1139 எனக் குறிக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்துவ ஆண்டு 1217-ஐக் குறிப்பதாகும். இக்கல்வெட்டு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கிபி 1218 முதல் 1238 வரையிலான 2-ஆவது ஆட்சி ஆண்டைச் சேர்ந்தது கல்வெட்டில் குலசேகரருக்கு 28-ஆவது ஆட்சி ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், குலசேரர் என்பது முதலாம் சடையவர்மன் குலசேகரனைக் குறிப்பிடுகிறது. இவர் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மூத்து சகோதரனாவார். மேலும், குலசேகரன் மற்றும் சுந்தரபாண்டியன் இருவரும் இணைந்து 1216-1217-ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த கல்வெட்டு கல்குறிச்சியில் உள்ள சிவன் கோயிலுக்கு நெல் விளையும் நிலத்தை முத்தரையர் கொடையாக அளித்தார் என்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டை வெட்டியவன் கல்குறிச்சி ஊரைச் சேர்ந்த கல்தச்சன் பூவன் இரட்டையான் என்ற சோழ கங்கதச்சன் என்றும் கல்வெட்டில் உள்ளது. இதில் குறிபிப்பிட்டிருக்கும் கல்குறிச்சி என்ற ஊர், மதுரை – தூத்துக்குடி சாலையில் உள்ளது.

ஸ்மார்ட் ரேசன் கார்டு தமிழ்நாட்டு

  ஸ்மார்ட் ரேஷன் கார்டு தமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் கார்டு என்பது வழக்கமான ரேஷன் கார்டின் மாற்றாகும், இது பொதுவாக சமூகத்தில் உள்ள ஒரு குறிப்பிட...