முதலாம் மகேந்திரவர்மன் (கிபி 600 முதல்630 வரை)
மகேந்திரவர்மன் ஆட்சி காலத்தை பற்றிவரலாற்று ஆசிரியர்களுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இவர்கிபி 610 ஆண்டிலிருந்துகிபி 632 வரை ஆட்சி புரிந்து வந்தார் என தி.வி. மகாலிங்கம் நம்புகிறார். ஆனால் கிபி 600 ஊரிலிருந்து 630 ஆம் ஆண்டு வரைஆட்சி செய்தார் என்ன ஆர். கோபாலனும், கிபி 606 லிருந்து கிபி 639 ஆம்ஆண்டு வரை ஆட்சி செய்தார் என ந. சுப்பிரமணியனும் கூறுகிறார்கள்.
சிம்மவிஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திர வர்மன், அவனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தான். பல்லவர் பரம்பரையிலேயே மிகவும் புகழ்பெற்ற மன்னனாக விளங்கிய முதல் மன்னன் மகேந்திரன்.
பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும், பல காலம் நீடித்த பேரரசு போட்டி மகேந்திரவர்மன் ஆட்சியில்தான் முதன் முதலாக தொடங்கியது. சாளுக்கியர் கதம்பர்களோடு போரிட்டுக் கொண்டிருக்கும் சமயம் பல்லவர்கள் நண்பர்களுக்கு உதவ முன் வந்ததால் சாளுக்கியர்கள் கதம்பர்களை அளித்ததோடு மட்டுமில்லாமல், காஞ்சியையும் கைப்பற்றினார்கள் என்றும், சாளுக்கிய மன்னன் புலிகேசியின் படைகள் காஞ்சிக்குள் நுழைந்தபின் மகேந்திர வர்மன் ஒரு கோட்டைக்குள் ஓடி ஒளிந்து கொண்டார் என்றும், இரண்டாம் புலிகேசி ஆய்ஹோல் கல்வெட்டை ஆய்ந்தால் தெரிகிறது. ஆனால் மகேந்திரவர்மனும் புலிகேசியை காஞ்சிக்கு பத்து மைல் தொலைவிலுள்ள புள்ளலூரில் தோற்கடித்தார் என பல்லவமல்ல இரண்டாம் நந்திவர்மனின் காசகுடி படத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆகையால் புலிகேசி காஞ்சிக்குள் நுழையும் முன்பே மகேந்திர வர்மன் அவனை எதிர்த்து புள்ளலூரில் தோற்கடித்து அவனை துரத்தி இருக்கலாம் என ந. சுப்ரமணியம் கூறுகிறார்.
இவன் சொந்தக்காரி (கோயில் கட்டுபவன்), மத்தவிலாசன் (இன்பம் விரும்புபவன்), சித்திரக்கார புலி (ஓவியங்களுக்கு புலி) என்ற விருதுகள் சிலவற்றையும் பெற்றான். மகேந்திரவர்மனின் மற்ற பெயர்கள் மகேந்திர விக்கிரமன், மகேந்திர பட்டரய்யன், சத்துரு மல்லன், நரேந்திரன், மகாபிடுகு, கலகப் பிரியா, அவனி பஜனன், லலிதாங்குரன், குணபரன், புருஷோத்தமன், சத்தியசந்தன், உதார சித்தன், மத்த விலாசன், சித்திரகாரப்புலி, முதலியன ஆகும். இப்பெயர்களின் பொருளை ஆராய்ந்தால் இவர் உண்மை விரும்பி, தாராள குணவான், சமய பற்றுள்ளவர், ஓவியம், இசைக்கலை முதலியவைகளில் பற்றுள்ளவர் என தெரிகிறது. இவர் ஆட்சி தொடங்கிய காலத்தில் வடக்கே கிருஷ்ணா ஆறிலிருந்து தெற்கே காவிரி ஆறு வழி பல்லவர் அரசு பரவியிருந்தது. ஆனால் இவர் நாட்டின் வட எல்லை திருப்பதி வரைதான் பரவியிருந்தது.
ஒரே பாறையில் குடைந்து கோயில் அமைக்கும் சிற்ப மரபானது இவன் காலத்தில் தமிழகம் முழுவதும் தோற்றுவிக்கப்பட்டது. புதுச்சேரிக்கு அண்மையிலுள்ள மண்டகப்பட்டு, திருச்சிராப்பள்ளி, பல்லாவரம், செங்கல்பட்டுக்கு அண்மையில் உள்ள வல்லம், மாமண்டூர், தளவானூர், சீயமங்கலம், மகேந்திரவாடி, ஆதியே இடங்களிலும் இவன் குகைக் கோயில்கள் குடைந்துள்ளான். அக் கோயில்களில் அவன் பொறிப்பித்த கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. மகேந்திரவர்மன் மகேந்திரவாடி ஏரியைக் கட்டி உலவுக்கு விலகினார். சிற்பத்திலும் ஓவியத்திலும் மட்டுமின்றி இசையிலும் இவ்வேந்தன் வல்லவனாக இருந்தான். இவனுடைய இசைப்புலமை குடுமியான்மலை கல்வெட்டு சான்று என சிலர் கருதுகின்றனர். இக்கல்வெட்டு சற்று காலத்தை சேர்ந்தது என வேறு சிலர் கூறுகின்றனர். இதுபற்றி இறுதியான முடிவுக்கு வர இயலவில்லை.
மகேந்திர வர்மன் ஆதியில் சமணனாக இருந்தான். பிறகு திருநாவுக்கரசரிடம் ஈடுபாடு கொண்டு பிறகு சைவ சமயத்தை தழுவினான். இவன் சிவலிங்க வழிபாடு உடையவன் என்று திருச்சிராப்பள்ளி கல்வெட்டு கூறுகின்றது. தான் சைவனான பிறகு பாடலிபுத்திரத்தின் (திருப்பாதிரிப்புலியுரில்) இருந்தஒரு சமணப் பள்ளியை இடித்து நிரவினான்.
சமயம்
சமண சமயத்தை மகேந்திர வர்மன் தழுவியபின், மற்ற சமயத்தினர் குறிப்பாக புத்த, சைவ சமயத்தினரை, துன்புறுத்தினார். ஆனால் அப்பர் பெருமானின் தொடர்பு மூலம் இவர் ஒரு சைவராக மாறினார் என்று சேக்கிழாரின் பெரிய புராணம் கூறுகின்றது. சைவ சமயத்தை தழுவிய பிறகு மற்ற சமையத்தினர்களை, குறிப்பாக சமணர்களை துன்புறுத்தினார். சமணர்களின் பள்ளிகளை இடித்து, அப்பொருட்களைப் பயன்படுத்தி குணதரிச்சுரம் என்னும் பகுதியில் சிவபெருமானுக்கு கோவில்கள் கட்டினார்.
கட்டிடக்கலை
மகேந்திர வர்மன் சைவ சமயத்தைத் தழுவியதால் தென்னாட்டு கோயில் கட்டிடக்கலைக்கு ஒரு புது திருப்பம் ஏற்பட்டது எனக் கூறலாம். இவர் பல குடைவரைக் கோயிலை ( பாறையில் குடைந்தெடுத்த கோயில்கள்) கட்டினார் என தென்னார்காடு மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு கல்வெட்டு குறிப்பிடுகின்றது. திருச்சிராப்பள்ளியிலும், அரக்கோணம் அருகிலுள்ள வல்லம் பகுதியிலும், தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தளவானூர் பகுதியிலும் இவரால் தோற்றுவித்த பல கோயில்களைக் காணலாம். இவருக்கு முன் மரம், செங்கல் சுண்ணாம்பு, சாந்து, உலோகம், முதலிய பொருட்களை பயன்படுத்தித்தான் கோயில்களை எழுப்புவது வழக்கம். ஆனால் முதன்முதலாக மகேந்திரவர்மன் தான் பாறைகளை பயன்படுத்தி பாறைகளில் குடைந்தெடுத்த கோயில்களை எடுத்தான். பொதுவாக இவைகள் மண்டப அமைப்பில் கட்டப்பட்டிருந்தன. இம்மண்டபம் அமைப்பின் இடது, வலது முனைகளில் கட்டப்பட்டிருந்தன. இக்கோயில்களில் சுவர்களில் கடவுளின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம் கோயில்கள் முழுவதும் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டன சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஆனால் மாமல்லபுரத்திலுள்ள ஆதிவராக குகைக் கோயில், தர்மராஜ ரதம், கோடிக்கால் மண்டபம் முதலியன மகேந்திரவர்மனால் எழுப்பப்பட்டவை என ஹீராஸ் பாதிரியார் கூறுகின்றார்.
ஓவியமும் இசையும்
ஓவியக்கலையில் ஈடுபாடுள்ள மகேந்திர வர்மனுக்கு ' சித்திரகாரப்புலி' எனும் பெயர் இருந்தது. நாட்டியக்கலை வளர்ச்சிக்கும் இப்பல்லவன் ஆதரவும், ஊக்கமும் அளித்தார் என தெரிகிறது. இசை அறிவு பெற்றிருந்த மகேந்திரன் இசை கலைக்கும் ஆதரவு அளித்தார் என்பதை குடுமியான்மலை இசைக் கல்வெட்டு மூலம் அறியலாம்.
இலக்கியம்
மகேந்திர வர்மன் புலமையும் பெற்றிருந்தார். மத்த விலாசப் பிரஹசனா, பகவதாஜுக்கியம் முதலிய இலக்கியங்களை இயற்றினார்.
இவர் ஆட்சியில் சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது சைவ நாயன்மார்கள் மூலமும், வைணவ ஆழ்வார்கள் மூலமும் இந்து மதம் விரைவாக புத்துயிருடன் வளரத் தொடங்கியது. மேலும் தென் இந்திய கட்டிடக்கலையை ஒரு புதுப்பாங்கான புதுப் பாதையிலே செலுத்திய பெருமை இவரையே சார்ந்ததாகும். தொண்டை மண்டலத்தில் முதன்முறையாக குடைவரை கோயில்கள் இவர் ஆட்சியில் தான் கட்டப்பட்டன. மேலும் இவர் ஆட்சி காலத்தில் இருந்து தான் முதன்முதலாக பாறைகளில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் தோன்றலாயின. பண்டைய பல்லவர்கள் ' செப்புப்பட்டயங்கள் மூலம்தான் செய்திகளை வெளியிட்டார்கள். மேலும் இவர் ஆட்சிக் காலத்தில் இலக்கிய மறுமலர்ச்சி மலர்ந்தது. பாரவி, தண்டின் போன்ற புலமை பெற்றவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்து வந்தார்கள். மேலும் பல்லவப் பேரரசு தோன்றுவதற்கு மகேந்திரவர்மனும் நரசிம்ம வர்மனும் துணை நின்றது தென்னிந்திய வரலாற்றில் ஒரு சிறப்பு போட்டியாக இருந்த சாளுக்கிய பல்லவ பேரரசு போட்டி தோன்றியது. மேலும் தென்கிழக்கு ஆசியாவிற்கும், தென்னிந்தியாவிற்கும் இடையே இருந்த பண்பாடு, வாணிபம், தவிர அரசு உறவு வளரத் தொடங்கியது. ஆகையால், மகேந்திரன் ஆட்சியில் பல்லவர் அரசு, போர் மூலம் மிகுதியான அளவில் வளரவில்லை என்றாலும், இவருடைய ஆட்சி தென்னிந்திய, பல்லவ வரலாற்றிலே ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது எனக் கூறினாள் மிகையாகாது.
முதலாம் மகேந்திரவர்மன் போட்ட புள்ளியிலிருந்து கோலம் போ கோலம் போட்டவர். இவரது பேரரசு பேராசையும், நில ஆதிக்க கொள்கையும் சாளுக்கியர், கங்கர், சோழர், பாண்டியர், சிங்களவர், தலைமையை வளர்த்தன. இவரது ஆட்சி காலத்தில் தமிழ்நாடு சமஸ்கிருத மயமாக்கப்பட்டது. இப்பல்லவ மன்னர் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் ஊக்குவிக்க விட்டாலும் அக்காரியத்தை, சைவ நாயன்மார்களும், ஆழ்வார்களும் செவ்வென செய்தார்கள். முதலாம் மகேந்திரவர்மன் போரை விரும்பியது போன்று ஆக்கப் பணிகளும் பாராட்டுக்குரியவை. தொண்டை மண்டலத்துக்கு திறமையான நிர்வாகத்தை வகுத்துக் கொடுத்தார் வேளாண்மையை வளர்க தடையற்ற நீர்ப்பாசன வசதிகளுக்கு முன்னுரிமை அளித்தார். இவர் உருவாக்கிய சித்திர மேக தடாகமும், மகேந்திரவாடி ஏரியும் இதற்கான எடுத்துக்காட்டுகளாகும். பல நகரங்கள் வர்த்தக, வாணிக மையங்களாகத் திகழ்ந்தன. இம்மன்னவரின் பெயரைக் கொண்ட மகேந்திர மங்கலம், மகேந்திரப்பள்ளி, மகேந்திரவாடி ஆகியவை இதற்கு சான்றுகளாகும். காஞ்சி கல்வி கேந்திரமாக காட்சியளித்தது. முதலாம் மகேந்திர வர்மன் தன் வாழ்நாளில் கட்டிடக் கலைஞராகவும், கவிஞராகவும், இசைஞானியாகவும், புரவலராகவும், சித்திரகாரப்புலியாகவும் இருந்துள்ளார். இப்பலபரிமாண பல்லவ பேரரசன் உண்மையிலேயே வரலாற்று பொக்கிஷமாக திகழ்ந்தான்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாழ்க தமிழ் வளர்க தமிழ்மொழி
நன்றி மீண்டும் வருக ......