தமிழ் : கரூர் மாவட்ட வரலாறு expr:class='"loading" + data:blog.mobileClass'>

இந்த வலைப்பதிவில் தேடு

கரூர் மாவட்ட வரலாறு

கருவூலம் - கரூர் மாவட்ட வரலாறு 


தமிழகத்தின் தொன்மை வாய்ந்த நகரங்களில் கரூர் முக்கியமானது. அதற்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உள்ளது. சங்க காலத்தில் சேரர் தலைநகரமாகவும், வணிக நகரமாகவும் கரூர் திகழ்ந்துள்ளது. மேற்குக் கடற்கரையில் இருந்து கிழக்கு கடற்கரைக்குச் செல்லும் பெருவழிப் பாதையாகவும் விளங்கியுள்ளது. இதனால் கரூர் பகுதியில் ரோமானியக் காசுகள் அதிகளவில் கிடைத்துள்ளன.


கோவிலூர், கரைபாளையம், வடுகனூர், வாழ்நாயக்கன்பட்டி, காளிப்பாளையம், வெஞ்மாங்கூடலூர் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் துறை ஆய்வு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் நெடுங்கூரில் காணப்பட்ட ஈமச்சின்னமான கல்வட்டம் 2006- 2007 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் முதுமக்கள் தாழிகளும் கண்டெடுக்கப்பட்டன.

இத்தகைய தொன்மையான வரலாறு கொண்ட கரூரில் போக்குவரத்து வளர்ச்சி, மக்களின் அறியாமை காணமாக பெருங்கற்காலச் சான்றுகளாக விளங்கும் கல்வட்டம், கல்குவை ஆகியவை பல இடங்களில் மாயமாகி விட்டன.

இதுகுறித்து தொல்லியல் துறை கரூர் சேரர் அகழ்வைப்பகக் காப்பாட்சியர் சி.செல்வக்குமார் கூறுகையில், “கரூர் அருகேயுள்ள மண்மங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் 40-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்பட்ட நிலையில் 4 வழிச்சாலை விரிவாக்கத்தாலும், கல்வட்டத்தில் உள்ள கற்கள் கிரைண்டர் குழவிக்காக எடுக்கப்பட்டதாலும் பல இடங்களில் கல்வட்டங்கள், கல்குவை மாயமாகிவிட்டன” என்றார்.

கரூர் மாவட்டத்தின் தொன்மையை விளக்கும் மரபுச்சின்னங்களாக விளங்கும் கல்வட்டம், கல்குவை உள்ளிட்ட சான்று களை சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் பொதுமக்களால் ஏற்படும் அழிவுகளில் இருந்து பாதுகாத்து கரூரின் வரலாற்றை வருங்கால சந்ததியும் அறிந்திட வகை செய்யும் வகையில் அரசு உரிய நட வடிக்கை மேற்கொள்வது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க தமிழ் வளர்க தமிழ்மொழி
நன்றி மீண்டும் வருக ......

ஸ்மார்ட் ரேசன் கார்டு தமிழ்நாட்டு

  ஸ்மார்ட் ரேஷன் கார்டு தமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் கார்டு என்பது வழக்கமான ரேஷன் கார்டின் மாற்றாகும், இது பொதுவாக சமூகத்தில் உள்ள ஒரு குறிப்பிட...